பிரதமருக்குச் சுமையாக இல்லாமல் பதவி விலகுவதே நல்லது: வேதாவுக்கு காடிர் அறிவுறுத்து

மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவித் துறப்பதே நல்லது என்று வலியுறுத்தியுள்ளார்

வேதமூர்த்தி தொடர்ந்து பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான காடிர் இன்று ஒரு வலைப்பதிவில் வலியுறுத்தினார்.

“அவர் பிரிவினையை உண்டாக்கும் மனிதராகி விட்டார். அவரது பணியில் மனநிறைவு கொள்வதாக மகாதிர் கூறியிருதாலும் பிரதமருக்குச் சுமையாக இல்லாமல் அவரே முன்வந்து விலகிக் கொள்வதே நல்லது”, என்றாரவர்.

அமைச்சராக பணிபுரிய கிடைத்த ஒரு வாய்ப்பை வேதமூர்த்தி வீணடித்து விட்டதாக காடிர் கூறினார்.

தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்பை அடுத்து வேதமூர்த்தியைப் பதவி விலகக் கோரும் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன.