பிரிட்டனின் மிக முக்கியமான 2 ஆவது விமான நிலையமான கேட்விக் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானங்களான டிரோன்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவ்விமான நிலையம் தொடர்ந்து 2 ஆவது நாளாக மூடப் பட்டுள்ளது.
இதனால் அங்கு ஆயிரக் கணக்கான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.
முன்னதாக புதன்கிழமை இரவு கேட்விக் விமான நிலையம் அருகே அனுமதியில்லாது இரு ஆளில்லா விமானங்கள் பறந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இவ்விமானங்களால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் விமான நிலையம் மூடப் பட்டது. மேலும் கேட்விக் விமான நிலையத்துக்கு விமானங்கள் வருவதற்கும் அங்கிருந்து விமானங்கள் புறப்படுவதற்கும் தடை விதிக்கப் பட்டது.
இதனால் ஆயிரக் கணக்கான பயணிகளின் முன் பதிவுகளும் ரத்தாகியதால் பெரும் அவதி ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் வியாழக்கிழமையும் ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததை அதிகாரிகள் அவதானித்ததால் பதற்றம் அதிகரித்தது. எனவே தொடர்ந்து 2 ஆவது நாளாகவும் கேட்விக் விமான நிலையம் மூடப் பட்டது.
-4tamilmedia.com