பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர்: அன்வார் செய்த நியமனங்களை மதிப்பீர்

பிகேஆரின் மேலிட பொறுப்புகளுக்கு அன்வார் இப்ராகிம் அண்மையில் செய்த நியமனங்களைக் கட்சி உறுப்பினர்கள் ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான் வலியுறுத்தினார்.

பிகேஆர் அமைப்பு விதிகள் சில பதவிகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கட்சித் தலைவருக்கு வழங்குகின்றன. மற்றவர்களுடன் ஆலோசனை கலந்து தலைவர் நியமனங்களைச் செய்கிறார் என சைட் பாட்லி ஷா கூறினார்.

“தலைவரின் முடிவுக்கு எதிராகக் குரல் எழுப்பக்கூடாது. அது கட்சித் தலைமைத்துவத்தில் பிளவு ஏற்பட்டிருக்கிறது ஏன்ற எண்ணத்தைக் கொடுத்து விடும்.

“கட்சித் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் தலைமைத்துவம் மொத்தமும்   மக்களுக்குக்  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற   ஒன்றுகூடி உழைக்க வேண்டும், உள்ளுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது, என்றார்.