பக்கத்தான் ஹரப்பான் எதிர்வரும் கேமரன் மலை இடைத் தேர்தலில் பிஎன் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடாது என்கிறார் ஹரப்பான் செயலகத் தலைவர் சைபுடின் அப்துல்லா.
ஜனவரி 26 இடைத் தேர்தல் முதல்முறையாக 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற்ற ஒரு தொகுதியில் நடைபெறும் தேர்தலாகும் என்றாரவர்.
“மேலும் இதுவே பிஎன் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு தேர்தலாகவும் அமைகிறது. இதற்குமுன் நடந்த நான்கு இடைத் தேர்தல்களும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் நடந்தன. அவை இரண்டும் ஹரப்பான் ஆட்சியில் உள்ள மாநிலங்கள்.
“எனவே, இது சுவாரஸ்யமான தேர்தலாக விளங்கும்”, என வெளியுறவு அமைச்சரான சைபுடின் இன்று குவாந்தானில் கூறினார்.