பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் பதவி விலக வலுக்கும் போராட்டம்

பிரான்ஸில் தற்போது தொடர்ந்து 8 ஆவது வாரமாக அதிபர் எம்மானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ஆரம்பத்தில பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் பின்னர் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டன.

தலை நகர் பாரிஸிலும் பிரான்ஸின் ஏனைய முக்கிய நகரங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. முக்கியாம பிரான்ஸில் அடிப்படைப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பதவி விலக வலியுறுத்தி பிரெஞ்சு நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக் காரர்கள் முயற்சித்தனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த பிரெஞ்சு போலிஸ் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அடக்கியது. இதில் வெடித்த வன்முறையில் பல பொதுச் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் சேதப் படுத்தப் பட்டன. பலர் காயமடைந்தனர். இந்நிலையில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஒரே நோக்கில் போராட்டக் காரர்கள் ஒருதலைப் பட்சமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் மீது அரசு குற்றம் சாட்டியுள்ளது.

-4tamilmedia.com