கேமரன் மலை இடைத்தேர்தல்: பிரச்சாரத்திற்கு அதிகமான கட்சித் தலைவர்கள் வருகிறார்கள்

 

கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகமான கட்சி தலைவர்கள் இன்று தானா ராத்தாவுக்கு வருகிறார்கள். அவர்களில் அம்னோவின் கைரி ஜமாலுடின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரும் அடங்குவர். இன்றிரவு சுங்கை கோயானில் நடைபெறும் பிஎன் செராமில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த செராமாவில் முகமட் ஹசான், வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஆகிய பிஎன் தலைவர்களோடு வேட்பாளர் ரமலி முகமட் நோரும் பங்கேற்கின்றனர்.

இதனோடு, செப் ரிட்சுவான் இஸ்மாயில் என்ற பிரபல சமையல்காரர் மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் ஆகியோரும் பக்கத்தான் ஹரப்பான் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

இன்று நடக்கும் பக்கத்தான் ஹரப்பானின் இதர தேர்தல் பிரச்சாரத்தில் அமனா வியூகத் தொடர்பு இயக்குனர் டிசுகிப்லி அஹமட், பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் இஸ்மாயில் மற்றும் டிஎபி அரசியல் கல்வி இயக்குனர் லியு சின் தோங் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.