தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.நிலத்துக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்திலிருந்து, அந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீன ராணுவத்தின் ஏவுகணைப் பிரிவு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.பூமிக்கு அடியிலிருந்து அந்த ஏவுகணை, கற்பனை எதிரி இலக்கை நோக்கி ஏவப்பட்டது என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.எனினும், எந்த இடத்திலிருந்து, எத்தனை மணிக்கு ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டது என்ற விவரத்தை அந்தத் தொலைக்காட்சி தெரிவிக்கவில்லை.
உலகின் மிகப்பெரிய ராணுவப்படையை கொண்ட சீன ராணுவத்தை மேலும் நவீனபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட முடிவின்படி சீன ஏவுகணைப் படைப் பிரிவால் இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
-athirvu.in