நாளை, கேமரன் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள வேளையில், முன்னாள் பிரதமர் நஜிப் வாக்காளர்களுக்கு ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
ஹராப்பான் மிரட்டினால், புன்னகை செய்யுங்கள். பரிசு பொருள்களைக் கொடுத்தால், பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், மறந்தும் ஹராப்பானுக்கு வாக்களித்து விடாதீர்கள்.
இது, பூர்வக்குடியினரை அவமதித்து, மிரட்டிய சம்பவம் நடதுள்ளதாக கூறி, 2 மணி நேரத்திற்கு முன்னர், கேமரன் மலை வாக்காளர்களுக்கு, தனது முகநூலின் வழி நஜிப் விடுத்துள்ள வேண்டுகோள்.
“மத்திய அரசாங்கம் அவர்கள் வசம் இருப்பதால், அவர்கள் கர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பரிசுகளை வாங்கி கொள்வோம், ஆனால் பிஎன் –னுக்கு வாக்களிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2017-ல், பிரதமர் மகாதிர் ஹராப்பானுக்காக ஆற்றிய ஓர் உரையின் போது இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
அம்னோ-பிஎன் கொடுக்கும் பரிசுகளை எடுத்துகொள்ளுங்கள், ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் என்று மகாதிர் கூறியிருந்தார்.
மகாதிர் மட்டுமின்றி, 2012-ல், பாஸ் தலைவர் நிக் அப்துல் அஸிஸ் நிக் மாட்டும், பாரிசானை எதிர்த்து நின்றபோது, பரிசுகளை வாங்கிக்கொண்டு, பாஸ்-க்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்துள்ளார்.
தங்கள் எதிர்ப்பையும் கோபத்தையும் வாக்குபெட்டியில் காட்டும்படி, நஜிப் பூர்வக்குடியினரைக் கேட்டுக்கொண்டார்.
“மிக முக்கியமான விஷயம், உங்கள் பிரதிநிதி உங்களில் ஒருவர், உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்,” என்றும் அவர் கூறியுள்ளார்.