கேமரன் இடைத்தேர்தல் | நாளை நடைபெறவுள்ள கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசானுக்கு வெளியேறும் வழியைக் காட்டச் சொல்லி, முன்னாள் வழக்கரைஞர் மன்றத் தலைவர், அம்பிகா சீனிவாசன் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தன்னைப் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய விமர்சகர் எனக் கூறிக்கொண்ட அம்பிகா, புதிய அரசாங்கத்தின் நிர்வாகம், முந்தைய அரசாங்கத்தைவிட பன்மடங்கு சிறப்பாக உள்ளதாகக் கூறினார்.
வெளியூரில் இருக்கும் கேமரன் மலை வாக்காளர்களையும், வாக்களிக்க மறவாமல் ஊர் திரும்புமாறு அம்பிகா தனது டுவிட்டர் வழி கேட்டுகொண்டார்.
“வாக்களிக்க ஊர் திரும்புங்கள். இந்த இடைத்தேர்தலை பொதுத் தேர்தலைப் போலவே நடத்துங்கள். கேமரனில் நீங்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தால், இங்குள்ள மக்களின் வாழ்க்கை மாறும்,” என்றார் அவர்.