முடிவுக்கு வரும் அரசு முடக்கம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப்.

35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, ஃபெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற உள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர் எழுப்புவதற்கான எந்த நிதியும் இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை.

இலங்கை
இலங்கை

தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டிய இந்த சுவர் கட்டுவதற்கான நிதியை ($5.7பில்லியன்) அளிக்காத எந்த ஒரு பட்ஜெட்டையும் நிராகரித்து வந்தார் டிரம்ப்.

ஆனால், அவரது எண்ணத்திற்கு ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிகள் சபை இரண்டும் தற்காலிகமாக இந்த அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

அமெரிக்க வேலைநிறுத்தம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்

டிரம்ப் கூறியது என்ன?

“பிப்ரவரி 15ம் தேதி வரை, அரசிற்கு நிதியளிக்கவுள்ள இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில், மிகவும் பெருமையாகவுள்ளது.

அரசியல் குழப்ப நிலையின்போது, தொடர்ந்து மிகச் சிறந்த தேசபற்றுமிக்கவர்களாக பணியாற்றிவரும் அதிகாரிகளுக்கு சம்பளம் அளிக்கப்படும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

இலங்கை
இலங்கை

அரசின் மிகவும் சக்திவாய்ந்த மாற்று– அதாவது தேசத்தில் அவசர நிலையை அறிவிக்கும் அளவிற்கான முடிவை தான் இன்னும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம், இராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் நிதி, தெற்கில் சுவர் எழுப்ப பயன்படலாம் என்றாலும், அவ்வாறான நகர்வு, சட்டரீதியான சவாலாக அமையும்.

அமெரிக்க வேலைநிறுத்தம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்

நமக்கு, மிக உறுதியான சுவர் அல்லது, உலோகத்தாலான தடுப்பு அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்.

காங்கிரஸிலிருந்து நியாயமான ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி அரசுப்பணிகள் முடங்கும் அல்லது நாட்டின் நீதி மற்றும் அரசியலமைப்பின் கீழ் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இது குறித்து அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.

அரசு முடங்கியதால், அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கேட்டறிந்த பின்னர், டிரம்ப் இந்த ஒப்பந்ததை ஏற்றுக்கொண்டார் என்று ராயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் எழுப்புவதற்காக தான் கோரும் $5.7 பில்லியனுக்காக தொடர்ந்து போராட அவர் தயாராக உள்ளார் என்றும் இது கூறுகிறது.

இலங்கை

ஆய்வு- ஆண்டனி, சர்ச்சர், வட அமெரிக்க செய்தியாளர், பிபிசி.

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி கிடைக்காத வரையில், அரசு மீண்டும் இயக்குவதற்கு தனது ஆதரவை அளிக்கமாட்டேன் என்று அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக கூறிவந்தார்.

வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 25), அமெரிக்காவின் இந்த அரசு முடக்கம் வான்வழித்துறை சில பிர்சனைகளை உருவாக்கியவுடன், டிரம்ப் பின்வாங்கியுள்ளார்.

இவையெல்லாம் தொடங்குவதற்கு முன்பு, குடியரசு கட்சி செனட்டரான பிட்ச் மெக்கோனல், ஜனநாயக கட்சி பிரமுகர்களுக்கு எதிராக இந்த அரசு முடக்கத்தில் வெற்றிபெற எந்த வழியும் இல்லை என்று அதிபரை எச்சரித்துள்ளார் என்று அறிக்கைகள் வந்தன.

ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசிஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி

நவம்பர் மாதம் வந்த தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வெற்றிக்குப் பிறகு இது சாத்தியமல்ல என்பதை அவர் குறிப்பிட்டார் என்று இந்த அறிக்கைகள் தெரிவித்தன.

அந்த செனட்டர் குறிப்பிட்டது தற்போது நிரூபணமாகியுள்ளது. நாட்டின் முடக்கம் குறித்த குற்றசாட்டுகளை அதிபரும், அவரின் கட்சியும் ஏற்றுக்கொண்டதை பார்த்த பதவியிலுள்ள குடியரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கு சற்று அசௌகர்யமாக இருந்திருக்கும்.

எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த காரசாரமான பேச்சுவார்த்தைக்கு மூன்று வாரம் கெடு தற்போது அமைந்துள்ளது. அரசு முடக்கத்தால் அதிக பணிச்சுமையில் மூழ்கியுள்ள அதிகாரிகளுக்கு இந்த தற்காலிக நிதி என்பது சற்று சுவாதிக்கும் வாய்ப்பை அளிக்கும் என்று கூறலாம்.

அடுத்த மூன்று வாரத்தில், மீண்டும் அரசு முடங்கலாம் அல்லது, அதிபர் எச்சரித்ததுபோல, அவசரநிலையை அறிவித்து, எல்லைச்சுவருக்கான சட்டரீதியான போராட்டத்தில் இறங்கலாம்.

எப்படி இருந்தாலும், அதிபர் பின்வாங்கியுள்ளார்; ஆனால், இந்த சண்டை முடிய வெகுதூரம் உள்ளது. -BBC_Tamil