இன்று நள்ளிரவு தொடக்கம், அடுத்த ஒரு வாரத்திற்கு, ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலை 5 சென் குறைய உள்ளது.
இதன்வழி, ரோன் 95, லிட்டருக்கு RM1.93-க்கும், ரோன் 97 லிட்டருக்கு RM2.23-க்கும் விற்கப்படும்.
அதேசமயம், டீசலின் விலை லிட்டருக்கு RM2.18-ஆக நிலை நிறுத்தப்படுகிறது.
உலக சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சில்லறை விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“உலக சந்தையில், பெட்ரோல் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேவேளையில், சீனா போன்ற நாடுகளில் டீசலுக்கான தேவை அதிகரித்துள்ளதால், டீசலின் விலை அதிகரித்து வருகிறது,” என்றார் அவர்.