துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர்.
கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும்.
250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக்கின்றனர். ஆனால் புளோரிடா போன்ற தெற்கு மாகாணங்கள் இந்த இந்தப் பேரிடரில் இருந்து தப்பின.
எப்படி உயிரிழப்புகள் நேர்ந்தன?
தமது கல்லூரியில் கட்டடம் ஒன்றுக்கு கீழே புதன்கிழமை அதிகாலை கீழே விழுந்து கிடந்த அந்த மாணவர், பிறகு மருத்துவமனையில் இறந்தார்.
மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட்டில் புதன்கிழமை தமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டின் முன்பு 70 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அதே மிச்சிகன் மாகாணத்தில் இன்னுமொரு 70வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவர் தமது பகுதியில் வெளியில் இறந்து கிடந்தார். அவர் குளிருக்குப் போதிய ஆடைகளை உடுத்தாமல் இருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். -BBC_Tamil