பாக். ராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ராணுவ ரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in