திருச்சபைகளில் பாலியல் அடிமைகளாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் – போப் ஒப்புதல் – மற்றும் பிற செய்திகள்

திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் – போப் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல்

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதகுருக்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை தாம் அறிந்துள்ளதாக போப் பிரான்ஸ் ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

சில மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துஷ்பிரயோகத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

-BBC_Tamil