ரஷ்யாவின் உள்ளடங்கிய தொலைதூர பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் டஜன் கணக்கான பனிக்கரடிகள் நுழைந்ததே இதற்கு காரணம். இந்த சம்பவமானது நொவாயா ஜெம்லியா தீவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்த தீவில் சில ஆயிரம் மக்களே வசிக்கிறார்கள். அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்குள் நுழைந்த பனிக்கரடி அங்குள்ள மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக, பனிக்கரடிகளுக்கு போதிய உணவு கிடைக்காத காரணத்தினால், அவை உணவை தேடி நகரங்களுக்கு வருகின்றன. -BBC_Tamil