மனிதர்கள் கட்டளை பிறப்பிக்காமல் ஆபத்தை தானே உணர்ந்து தாக்குதலை நடத்த வல்ல ஆளில்லா விமானத்தை சேவையில் இணைத்துள்ளது சீன ராணுவம். இது 3ம் உலகப் போரை ஆரம்பிக்க வல்லது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த 4ம் தலை முறை ஆளில்லா விமானம், பல மணி நேரம் வானில் பறக்கும் திறன் கொண்டதோடு.
எதிரியின் ஆபத்தினை கருத்தில் கொண்டு, தானாகவே தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது. எனவே இந்த விமானத்திற்கு அருகே அமெரிக்க அல்லது ஏதாவது ஒரு நாட்டு விமானம் சென்றால். அது ஆபத்து என உணர்ந்தால் உடனே தாக்குதல் நடத்தும். இது பெரும் விளைவுகளை தோற்றுவிக்கும் என்று உலகில் உள்ள பல வல்லரசுகள் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் எந்த ஒரு எச்சரிக்கையையும் கணக்கில் கொள்ளாது, சீனா இந்த விமானத்தை தனது ராணுவ பிரிவில் இணைத்துள்ளார்கள் என்பது பெரும் அதிர்சியான விடையமாக உள்ளது.
-athirvu.in