பிஎன், பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் செமிஞ்யி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நாளை தனித்தனி நிகழ்வுகளில், அறிவிக்கும் எனத் தெரிகிறது.
பிப்ரவரி 16 வேட்புமனு தாக்கல் செய்யும் நாளாகும்.
பிஎன் வேட்பாளரை அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் நாளை ஐந்து மணிக்கு அறிமுகப்படுத்துவார்.
அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ஹரப்பான் செமிஞ்யி சேவை மையத்தில் அதன் வேட்பாளரை அறிவிக்கும்.
ஒரு சுவையான தகவல்- ஹரப்பான் சேவை மையம் உள்ள இடத்துக்கு மிக அருகில் உள்ள டெஸ்கோ ஹைப்பர்மார்க்கெட்டுக்கு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்றிரவு வருகை புரியவுள்ளார். இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா, தெரியவில்லை.
இதனிடையே, பார்டி சோசலிஸ் மலேசியாவும் செமிஞ்யில் அதன் வேட்பாளரைக் களமிறக்குகிறது. அதன் வேட்பாளரை அக்கட்சி இன்றிரவு மணி 8.30க்கு அறிவிக்கும்.
பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகம்மட் நோர் காலமானதால் காலியான செமிஞ்யி தொகுதிக்கான இடைத் தேர்தல் மார்ச் 2-இல் நடைபெறும்.