பாஸுடனான மறைமுக ஒத்துழைப்பை முறைப்படுத்துவீர், கிளந்தான் அம்னோ வலியுறுத்து

பாஸுடன் உள்ள மறைமுகமாக ஒத்துழைப்பு முறைப்படுத்தப்பட. வேண்டும் என கிளந்தான் அம்னோ விரும்புகிறது.

அதன் தலைவர் அஹமட் ஜஸ்லான் யாக்கூப், ஒத்துழைப்பை முறைப்படுத்திக் கொண்டால் அவ்விரு கட்சிகளுக்குமிடையிலும் எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு மேம்படும் என்றார்.

“கிளந்தான் அம்னோ இப்போதுள்ளதைப் போன்ற ஒத்துழைப்பை வரவேற்றாலும் உறவுகள் மேலும் வலுவடைவதைக் காண அது விரும்புகிறது”, என மாச்சாங் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டுக்குமிடையில் வலுவான உறவுகள் நிலவுமானால் வரும் தேர்தல்களில் அவை கூடுதல் இடங்களை வெல்ல முடியும் என்றாரவர்.