டிரம்ப் – கிம் இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு!

இன்று (27 ) வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் அன் ஆகியோருக்கிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஹனோயிலுள்ள மெற்ரோபோல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 2600 பேர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இரு நாட்டு தலைவர்களும் சிறிது நேரம் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பின்னர் 20 நிமிடங்கள் நேருக்கு நேர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போத அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த ஜனாதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk