சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன.
ஹயாத் தாகிர் அல்-ஷாம் அமைப்பு அல் கொய்தாவின் கிளை இயக்கமாக முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இட்லிப்பில் ஹமா, அலெக்போவை மீட்க சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு ஹயாத் தாகிர் அமைப்பினர் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை சிரியா ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால் எத்தனை பேர் பலியாகினர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர் என சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சிரியா ராணுவத்தினரால் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இங்கிலாந்தை சேர்ந்த கண்காணிப்பு குழு ரமி அப்தெல் ரஹ்மான் கூறியுள்ளார். மேலும் லடாகியா பகுதியில் ஹயாத் தாகிர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியா வெளியுறவு மந்திரி கூறும் போது அப்பாவி பொது மக்கள் மற்றும் ராணுவத்தின் மீது பயங்கரவாதிகளோ அவர்களுக்கு உதவுபவர்களோ தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.
-athirvu.in