பிஎன் உறுப்புக் கட்சிகள் கூட்டணியைக் கலைக்கக் கோரிக்கை விட்டுவரும் வேளையில் அது குறித்துப் பரிசீலிக்க அம்னோ உச்சமன்றம் இன்று கூட்டம் நடத்தவுள்ளது.
கூட்டம் நடைபெறுவதை உச்சமன்ற உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு ஹானிபா உறுதிப்படுத்தியதாக த மலேசியன் இன்சைட் கூறியது.
அக்கூட்டத்தில் அம்னோ தலைவர்கள், மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக பேசிவருவது குறித்து விவாதிப்பார்கள் என்று ரமாண்ட் கூறினார்.
“உச்சமன்றம் இன்று கூடி அது பற்றி விவாதிக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
அம்னோ உச்சமன்றக் கூட்டம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறுகிறது.
நாளை பிஎன் உச்சமன்றக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.