எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியதா? அமெரிக்கா தீவிர விசாரணை!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்பது குறித்து அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அதைத்தொடர்ந்து காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மீது குண்டு வீச பாகிஸ்தான் போர் விமானங்களை பயன்படுத்தியது. அவற்றில் 2 விமானங்களை இந்திய ரணுவம் சுட்டு வீழ்த்தியது.

விமானத்தை ஆய்வு செய்ததில் அவை ‘எப்-16’ ரக விமானங்கள் என தெரியவந்தது. அந்த விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானால் வாங்கப்பட்டவை.

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மட்டுமே எப்-16 ரக போர்விமானங்களை பயன்படுத்த வேண்டும்

என்ற ஒப்பந்த அடிப்படையில் தான் அவை வழங்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்-16 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதற்கிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட எப்.16 ரக விமானத்தின் வீடியோ, போட்டோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களுடன் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதை வைத்து பாகிஸ்தானிடம் அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இந்தியாவின் அறிக்கை மூலம் இப்பிரச்சினையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் வெளிப்படையாக கூற முடியாது. இருந்தாலும் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

-athirvu.in