தப்பிக்க முற்பட்ட ஐ.எஸ் ஆயுததாரிகள் 400 பேர் கைப்பற்றப்பட்டனர்

கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதிக் குறுகிய இடமான பக்கூஸிலிருந்து, ஆட்கடத்தல்காரர்களுடன் தப்பிக்க முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் 400 பேர் கைப்பற்றப்பட்டதாக, சிரிய ஜனநாயகப் படைகளின் சிரேஷ்ட தளபதியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நூற்றுக்கணக்கான வேறு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் சரணடைந்தத நிலையில் எத்தனை பேர் என்பது தெளிவில்லாமல் உள்ளதாக குறித்த தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பக்கூஸிலிருந்து இறுதியாக, நேற்று  வெளியேறிய 2,000க்கும் மேற்பட்டோரில் சரணடைந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள், தாங்கள் விசாரணைக்கு, தேடுதலுக்கு உள்ளாகின்ற, உணவு, நீர் வழங்கப்படுகின்ற பாலைவனமொன்றுக்கு ட்ரக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றனர்.

இதேவேளை, பக்கூஸிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்ட, தம்மை முழுமையாக மறைத்த ஆடையை அணிந்த பெண்கள் குழுவொன்று, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளால் தேடுதல் மேற்கொள்ளப்படும் அவர்களது சோதனைச்சாவடி அருகே கூடியபோது ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிட்டிருந்ததுடன், ஒருவர், ஊடகவியலாளரொருவரை மீன் டின்னால் தாக்கியிருந்தார்.

இந்நிலையில், சரணடையவிரும்பாத பெரும் எண்ணிக்கையான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள், பக்கூஸுக்குள் இன்னும் இருப்பதாக மேற்குறித்த தளபதி தெரிவித்துள்ளார்.

-tamilmirror.lk