புத்ரா ஜெயா எம்பி தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்தான் இன்னமும் பிஎன் தலைமைச் செயலாளர். பிஎன் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் இன்று இதனைத் தெரிவித்தார்.
பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அசிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது முறையாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் தெங்கு அட்னான் அப்பதவியிலிருந்து நீக்கப்படவுமில்லை விலகவுமில்லை என்றவர் கூறினார்.
“தெங்கு அட்னான் பதவி விலகும்வரை அல்லது நீக்கப்படும்வரை அவரே அப்பதவியில் இருப்பார் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறோம்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக முகம்மட் தலைமையில் பிஎன் உச்சமன்றக் கூட்டம் இன்று நடந்தது.
நஸ்ரி, கடந்த ஆண்டில் அப்போதைய பிஎன் தலைவராக இருந்த அஹமட் ஜாஹிட் ஹமிடியால் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அதை மசீசவும் மஇகாவும் ஏற்கவில்லை.
அது தொடர்பாக தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால் அவரது நியமனம் செல்லாது என்பது அவர்களின் வாதம்.