வியட்நாமில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு!

வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டது என்று வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹை கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் சமீபத்தில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹை, தூதரக அதிகாரிகள் மற்றும் அயல்நாட்டு பத்திரிகையாளருடன் தலைநகர் பியாங்யாங்கில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், ‘‘வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டது’’ என கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘15 மாதங்களாக ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை நிறுத்திவைத்திருப்பதற்கு கைமாறாக வடகொரியாவுக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்காத வரையில் சமரசத்துக்கோ அல்லது புதிய பேச்சுவார்த்தைக்கோ வாய்ப்பு இல்லை’’ எனவும் தெரிவித்தார்.

-athirvu.in