பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பாரா மிலிட்டரி சோதனை சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பலுசிஸ்தான் சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

-athirvu.in