பாக்.,கில் ஹிந்து சிறுமியர் மதமாற்றம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு

புதுடில்லி:பாகிஸ்தானில், இரண்டு ஹிந்து சிறுமியரை கடத்தி, வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் முடித்து வைக்கப்பட்டது குறித்து விசாரிக்க, அந்த நாட்டு பிரதமர், இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

அண்டை நாடான, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கோட்கி மாவட்டத்தை சேர்ந்த சிறுமியர், ரீனா, 15, ரவீனா, 13. சமீபத்தில், இருவரும், வீட்டில் ஹோலி பண்டிகை ண்டாடினர்.

அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், சிறுமியரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இது பற்றி, போலீசில் பெற்றோர்

புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் பின், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வில், சிறுமியரை மதம் மாற்றி, வலுக்கட்டாயமாக, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் காட்சி இடம் பெற்றுஇருந்தது. மற்றொரு வீடியோ வில், சிறுமியர் இருவரும், ‘நாங்கள் விரும்பி தான், மதம் மாறினோம்’ என, கூறியிருந்தனர்.

இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தானில் சிறுபான்மை யினராக வசிக்கும் ஹிந்துக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந் நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர், பவாத் சவுத்ரி, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:இரண்டு ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது பற்றி விசாரிக்க, சிந்து மாகாண முதல்வருக்கு,பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்,

இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கவும், சிந்து மற்றும் பஞ்சாப் மாகாண அரசுகளை, பிரதமர் கேட்டு கொண்டு உள்ளார். பாக்., தேசிய கொடியில் உள்ள வெள்ளை நிறம், சிறுபான்மையினரை குறிக்கிறது. அவர்களை காப்பாற்ற வேண்டியது, அரசின் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில், இரண்டு ஹிந்து சிறுமியரை கடத்தி, வலுக்கட்டாயமாக மதமாற்றி, திருமணம் செய்து வைக்கப் பட்டு ள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரிடம் அறிக்கை கேட்டு உள்ளேன்.சுஷ்மா சுவராஜ்வெளியுறவு அமைச்சர், பா.ஜ.

-dinamalar.com