கம்முனிஸ்டு ஆதரவாளர்களே பாஸைத் ‘தாலிபான்’ என்பார்கள்- ஹாடி சாடல்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தம் கட்சியைத் தாலிபான் என்று வருணிப்போர் கம்முனிஸ்டு ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள் எனச் சாடினார்.

தம்முடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு கவிதையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “Kamu tuduh kami Taliban, di belakang kamu ada Komunis.”(தாலிபான்கள் என்று எங்களைத் தூற்றுவோரே உங்கள் பின்னால் இருப்பவர்கள் கம்முனிஸ்டுகள்).

அம்னோ- பாஸ் ஆட்சிக்கு வந்தால் மலேசியா “தாலிபான் அரசாக” மாறிவிடும் என்று பேராக் டிஏபி தலைவர் ங்கா கொர் மிங் கூறியிருந்ததற்கு எதிர்வினையாக ஹாடி அந்தக் கவிதையைப் பதிவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.