சிங்கிள் புல்லட் தலையில் பாய மேடையில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டு இருந்த யெமன் நாட்டு அல்கைடா தலைவர் அபு அல் ஹரீட்டி உடனே கொல்லப்பட்டார். யெமன் நாட்டில் இயங்கிவரும் அல்கைடா அமைப்பின் தலைவராக இருக்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவர், அபு அல் ஹரீட்டி. இவரை நீண்ட நாட்களாக கொலை செய்ய இஸ்ரேல் குறிவைத்திருந்தது. ஆனால் ஜெமன் நாட்டில் அவர் இருக்கும் இடத்தை கூட இஸ்ரேல் உளவுப் படையால் நெருங்க முடியவில்லை. 5 அடுக்கு பாதுகாப்பில் அவர் பாதுகாக்கப்பட்டு வந்தார்.
இன் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் யெமன் நாட்டில், தமது கட்டுப்பாட்டு பிரதேசம் ஒன்றில் வைத்து ஒரு விழாவை நடத்தி. அங்கே மேடையில் உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளதால், இஸ்ரேல் தனது போர் விமானத்தை அங்கே அனுப்பி பயன் இல்லை. இதுபோக யெமன் நாட்டிற்கும் இஸ்ரேல் போர் விமானங்கள் அத்து மீறி நுளைந்தால் அதுவும் சிக்கலில் தான் முடியும்.
இதனால் சரியான திட்டம் ஒன்றை இஸ்ரேல் தீட்டியது. சுமார் 400 KM க்கு அப்பால் உள்ள தனது நிலை ஒன்றில் இருந்து, ஆளில்லா சிறிய விமானம் ஒன்றை அது ஏவியது. இது ஏனைய ஆளில்லா விமானங்களை விட மிகச் சிறியது ஆகும். இதில் குண்டுகள் எதுவும் கிடையாது. துப்பாக்கி ஒன்று மட்டுமே உள்ளது. அது போக ஒரே ஒரு குண்டை மட்டுமே இது சுட வல்லது. எனவே மிக மிக கவனமாக அதனை பாவிக்கவேண்டும். குறித்த மிகச் சிறிய விமானத்தை அனுப்பி 400KM அப்பால் இருந்தே தலைவர் அபு அல் ஹரீட்டியை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. இதோ வீடியோ இணைப்பு.