மசூத் அசார் விடயத்தில் அடம் பிடிக்கும் சீனா! : காஷ்மீர் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக் அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து தடுத்து வருகின்றது.

இதனால் மசூத் அசாரைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் கை கோர்த்துள்ளது. இந்நிலையில் மோதல் போக்கைத் தவிர்க்க காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்குத் தடை விதிக்க அனுமதிக்குமாறு சீனாவுக்குப் பாகிஸ்தானும் கோரிக்கை விடுத்துள்ளது. மறுபுறம் இந்தியாவின் நடவடிக்கையில் இருந்து பாகிஸ்தானை பாதுகாக்கும் விதத்தில் சீனா தீவிரவாதிகள் விவகாரத்தில் மெத்தனமாகச் செயற்பட்டு வருகின்றது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க வியாழக்கிழமை ஒரு திட்ட வரைவை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த நகர்வை பிரான்ஸும், பிரிட்டனும் வரவேற்றுள்ளன. மேலும் இந்தத் தீர்மானம் சீனாவுக்கு இன்னும் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

-4tamilmedia.com