ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர்.
இதன்மூலம் மே 22 அன்று ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது.
இதற்கான தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்றும், ஏப்ரல் 12ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் என்றும் தெரீசா மே தெரிவித்தார்.
பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தொழிலாளர் கட்சி ஜெரேமி கார்பின் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பொது அவையில் தனது ஒப்பந்தத்துக்கு தொடர்ந்து பிரதமர் தெரீசா மே ஆதரவு கோருவார் என நெருங்கிய வட்டாரங்கள் சில தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தனது ட்விட்டர் பதிவில், ஏப்ரல் 10ஆம் தேதி ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தை கூட்ட முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார். -BBC_Tamil