பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சிகிச்சை பெறுவதற்காக தேசிய இருதயக் கழகத்தில் சேர்க்கப்பட்டார்.
அதை அவரின் பத்திரிகைச் செயலர் அப்துல் மாலிக் அப் ரசாக்கும் உறுதிப்படுத்தினார். .
“ஆமாம், நேற்று அவர் ஐஜேஎன்னில் சேர்க்கப்பட்டார். துவான் குரு ஓய்வெடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்”, என்றவர் மலேசியாகினிக்கு இன்று காலை வாட்ஸெப்பில் தகவல் தெரிவித்தார்.
2017 மே மாதம் ஹாடிக்கு ஐஜேஎன்னில் இருதய வால்வ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் தமக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களை வெகுவாகப் பாராட்டினார்.