ரந்தாவ் இடைத்தேர்தல் | இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில், கேலி கிண்டலுக்கு இடமில்லை எனப் பிஎச் வேட்பாளர் டாக்டர் ஶ்ரீ ராம், பிஎன் வேட்பாளர் முகமட் ஹசானுக்கு நினைவுபடுத்தினார்.
“இது கிண்டலடிக்கும் நேரமல்ல. மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட வேண்டிய நேரம்.
“பிரச்சாரத்தில் ‘குடிபோதையில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய மாட் ஹசானுக்கும், ஒரு சாதாரண தனிநபருக்கும் வித்தியாசம் ஏதுமில்லை,” என்று அவர் கூறினார்.
தன்னைக் ‘குடிக்காரர்’ என்று பேசிய மாட் ஹசானின் கூற்றைப் பற்றிக் கேட்டபோது, ஶ்ரீ ராம் இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னதாக, தான் விளையாட்டாகவே அச்சொல்லைப் பயன்படுத்தியதாக, அம்னோ துணைத் தலைவருமான முகமட் சொன்னார்.
“நான் ஒருவரின் கண்ணியத்தை அவமானப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்,” என்று மலேசியாகினியிடம் மாட் ஹசான் தெரிவித்தார்.