அமெரிக்காவில் ராப் இசைப்பாடகர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ராப் இசைப்பாடகர் நிப்சே ஹுசில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார்.

நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் நிப்சே ஹுசில் உள்பட 3 பேருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் நிப்சே ஹுசில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் ஹுசிலின் மனைவி பெயர் லாரன் லண்டன். இவர் ஒரு நடிகை ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் ‘விக்டரி லேப்’ என்ற இசை ஆல்பத்துக்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இது இவரது முதல் இசை ஆல்பமாகும். இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பம் விருதை இது பெற்று இருந்தது.

-athirvu.in