ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க எல்லா அமைச்சுகளும் ஒவ்வொரு நாளும் 15 நிமிடத்துக்கு உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.
‘X-Break எனப்படும் இத்திட்டத்துக்காக ஒவ்வோர் அமைச்சும் அதன் பணியாளர்கள் உடல் பயிற்சி செய்வதற்கு காலை அல்லது மாலை வேளையில் 15 நிமிடத்தை ஒதுக்க வேண்டும்.
“எல்லா அமைச்சர்களும் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலையில் 15 நிமிடத்தை ஒதுக்கச் சொல்லி இருக்கிறோம். ஒவ்வோர் அமைச்சும் அதன் வசதிப்படி செய்து கொள்ளலாம்.
“சில அமைச்சுகள் ஏற்கனவே செய்து வருகின்றன. எல்லா அமைச்சுகளும் பின்பற்றத்தக்க ஒரு வழிகாட்டியை நாங்கள் விரைவில் வழங்குவோம்”, என்றாரவர்.