நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி வலதுசாரி அமைப்புகள் போராட்டம்!

நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.

ராஷ்ட்ரீய பிரஜாதந்ரா கட்சி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்தால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னராட்சி இருந்த காலத்தில் உலகின் ஒரேயோரு இந்து நாடாக நேபாளமே இருந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மூலம் மதச்சார்பற்ற நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk