“அமெரிக்காவிடம் சரியான அணுகுமுறை இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – வட கொரியா

“அமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே அதிபர் டொனால்டு டிரம்புடன் மூன்றாவது பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வேன்” என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை சனிக்கிழமை கிம் ஜாங்-உன் தெரிவித்ததாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றை அதிபர் டிரம்ப் உருவாக்க வேண்டுமென கிம் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கிம் ஜாங்-உன்னை புகழ்ந்து அதிபர் டிரம்ப் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.