இவன் சும்மாவே இருக்க மாட்டானா ? நண்டுக் கறி படம் கசிந்ததால் சாகப் போகும் அசங்க…

விக்கி லீக்ஸ் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். யூலியன் அசங்க என்னும் நபர் ஒரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர். அமெரிக்க FBIஐ சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க ரகசியங்கள் பலவற்றை இவரிடம் கொடுக்க. இவர் விக்கி லீக்ஸ் என்னும் இணையத்தை 2006ம் ஆண்டு ஸ்தாபித்தார். ஆனால் அது 2010ம் ஆண்டு தான் பலருக்கு தெரியவந்தது. இவர் அமெரிக்காவின் பல பரம ரகசியங்களை இதனூடாக வெளியிட்டு. பகையை சம்பாதித்துக்கொண்டார். அமெரிக்கா இவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவே. இவர் தப்பித்து பிரித்தானியவில் வந்து அடைக்கலம் கோரி இரு நாடுகளையும் பெரும் சிக்கலில் தள்ளினார்.

சுவீடன் நாட்டில் யூலியன் அசங்க இருந்தவேளை ஒரு பெண்ணோடு உறவில் இருந்துள்ளார். ஒருவாறு அந்தப் பெண்ணை அமெரிக்கா தேடி கண்டு பிடித்து. அப்பெண் அசங்க தன்னை கற்பழித்ததாக சொல்ல வைத்தது. இதனை அடுத்து சூவீடன் நாடு இவருக்கு இன்டர் நஷனல் பிடியாணை பிறப்பித்தது. உலகில் பல பற்பழிப்புகள் நடக்கிறது. ஆனால் எந்த ஒரு நாடும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்பது கிடையாது என்பது ஒரு புறம் இருக்க. இதனை சாட்டாக வைத்து பிரித்தானியா இவரை கைதுசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அப்பாடா ஒரு வழியா சான்ஸ் கிடைத்துவிட்டது என்று நினைத்து பிரித்தானியா இவரை கைதுசெய்ய ஆரம்பிக்க.

அமெரிக்காவுக்கு காட்டிய தண்ணியை விட ஏகப்பட்ட ஆப்பை அடித்தார் யூலியன் அசங்க. அது என்னவென்றால் லண்டனில் உள்ள ஈகுவட்டோர் நாட்டின் தூதுவராலயத்தில் இவர் தஞ்சம் அடைந்தார். லண்டனில் உள்ள எந்த ஒரு வெளிநாட்டு தூதுவராலயத்திற்குள்ளும் லண்டன் பொலிசார் நுளைய முடியாது. அங்கே ரூம் போட்டு தங்கிய யூலியன் அசங்காவை ஈகுவட்டோர் நாடு நன்றாக கவனித்துக் கொண்டது. சுமார் 4 வருடங்களுக்கு மேல் அங்கே தங்கி இருந்த யூலியன் அசங்காவுக்கு இதுவரை 5 மில்லியன் டாலர்களை ஈகுவட்டோர் அரசு செலவு செய்துள்ளதாம். இன் நிலையில் திடீரென லண்டன் பொலிசார் ஈகுவடோர் நாட்டு தூதுவராலயம் முன்பாக செல்ல, அங்கே இருந்து வந்த அதிகாரிகள் யூலியன் அசங்காவை பொலிசாரிடம் கையளித்தார்கள் என்ற செய்தி, காட்டு தீயாக பரவியது.( நேற்று முன் தினம்)

அட ஏன் இப்படி நடந்தது ? எல்லாமே நல்லா தானே போய் கிட்டு இருந்திச்சு ! எண்டு எல்லாருமே பேசிக்கொண்டு இருக்க. இன்று தான் அதற்கான விடை தெரிந்துள்ளது. அது என்னவென்றால் இவர் ஈகுவட்டோர் நாட்டு எம்பாசிக்கு உள்ளே தங்கி இருந்தவேளை. அடிக்கடி அன் நாட்டு ஜனாதிபதி அவரோடு ஸ்கைப்(skype) வழியாக வீடியோ காலில் பேசி வந்துள்ளார். ஒரு நாள் ஈகுவட்டோர் நாட்டில் அவர் தனது அரச மாளிகையில் கட்டிலில் இருந்துகொண்டு, நண்டு கறி சாப்பிட்டுக்கொண்டு பேசியவேளை. இந்த யூலியன் அசங்க அதனை ஸ்கிரீன் ஷாட் (screen shot)அடித்து புகைப்படமாக சேகரித்துவிட்டார். ஆடிய கையும்… ஓடிய காலும் சும்மா இருக்காது என்பார்கள். அது போல இவருக்கு சனியன் இவர் செய்யும் செயலில் தான் இருந்துள்ளது. அந்த படத்தை இவர் வெளியிட்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட ஈகுவட்டோர் ஜனாதிபதி செம கடுப்பாகி.

இந்த நாயை வெளியே தொரத்தி விடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார். அடைக்கலம் கொடுத்தால். அந்த நாட்டு ஜனாதிபதியையே நீ அவமானப்படுத்துவியா ? என்று கேள்வி கேட்ட அதிகாரிகள். அவரை அப்படியே பிடித்து வந்து லண்டன் பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஈகுவட்டோர் நாடு பஞ்சத்தில் அல்லாடும் போது ஜனாதிபதி உல்லாசமாக நண்டு கறி சாப்பிடுகிறார் என்று இந்த புகைப்படங்களை சாட்சியாக வைத்து, எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பது ஒரு செய்திதான்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்காவுக்கு இவர் நாடு கடத்தப்பட்டால்… நாற்காலியில் உட்காரவைத்து விஷ ஊசியை ஏற்றுவது உறுதி. எல்லாம் நண்டுகறி செய்த வேலையா ?

-அதிர்வுக்காக,
கண்ணன்