இலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது

துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று, அந்நாட்டு செய்தி நிறுவனமான எனடொலு  செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர் ஒருவரைத் தவிர பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், மொரோக்கோ, டியுனீசியா, ஈரான், ஈராக், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

-tamilmirror.lk