வெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; பெரும் அதிர்ச்சியில் மக்கள்!

பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்றனர்.

அதை அறிந்த அவர் வீட்டில் இருந்த தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அவரது கட்சி ‘அப்ரா’ உறுதி செய்துள்ளது. ஆலன் கார்சியா ஏற்கனவே 3 தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய ஆபரேசன் நடந்துள்ளது.

ஆலன் கார்சியா மறைவுக்கு அதிபர் மார்டின் விஷ்காரா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் கூறியுள்ளார்.

-athirvu.in