ஜோகூர் பெர்சத்து தலைவர் தொடர்பில் தெரிவிக்கப்படும் ஊகங்கள் ஹரி ராயாவுக்குப் பின்னர் முடிவுக்கு வரும்.
ஜோகூர் மாநிலத் தலைவரை பெர்சத்து கட்சித் தலைவர் முகைதின் யாசின் கட்சித் தேர்தலுக்கு முன்னதாக அறிவிப்பார் என பெர்சத்து ஊடக இயக்குனர் சொலிஹான் பட்ரி தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் கூறுகிறது.
“ஹரி ராயாவுக்குப் பின்னர், கட்சித் தேர்தலுக்கு முன்னதாக ஜோகூர் மாநிலத் தலைவரைக் கட்சித் தலைவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
“அதற்கு முன்னதாக, பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா அவ்விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுப்பார்”, என சொலிஹான் கூறினார்.