நாட்டைவிட்டு வெளியேற வெனிசுவேலா அதிபர் மதுரோ எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் கூறியதாகவும், ஆனால் பின்னர் அவர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய அளவில் வெனிசுவேலாவில் போராட்டங்கள் நடைபெற்றன. வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடினார். ஆனால், ராணுவம் மறுத்துவிட்டது. மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார். ஆனால் ரஷ்யாவால் தடுத்து நிறுத்தப்பட்டார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவிக்கிறார். -BBC_Tamil