அமெரிக்காவால் விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றிருப்பதாக இணைய செய்தித்தளமொன்றில் வெளிவந்த செய்தி தவறு என வெளியுறவு அமைச்சு கூறியது.
“அமெரிக்கா செல்லும் மலேசியர்கள் வழக்கம்போல் விசா எடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்”, என அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
அதில் எந்த மாற்றமுமில்லை.
எனவே, வாட்ஸ் எப்பிலும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்கு விசா தேவையில்லை என்ற செய்தியை வைரலாக்க வேண்டாம் என்று அது கேட்டுக்கொண்டது.