ஆப்கானிஸ்தானில் காவல்துறை தலைமையகத்தை தாக்கிய தாலிபன்கள்

தாலிபன் தீவிரவாத இயக்கத்தினர், ஆப்கானிஸ்தானில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள புல்-இ-கும்ரி என்ற நகரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த பலரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஃப்கன் படைகள் மீது அவ்வப்போது தாலிபன் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பாலான பிராந்தியத்தை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.

நீண்ட காலமாக இருக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அமெரிக்காவுடன், தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

ஆஃப்கானில் காவல்துறை தலைமையத்தை தாக்கிய தாலிபன்கள்

இத்தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆஃப்கன் நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. -BBC_Tamil