உலகின் வயதான மனிதர் 123 வயதில் காலமானார்

மாஸ்கோ: உலகின் மிகவும் வயதான மனிதரான 123 வயது அப்பாஸ் இலியிவ் காலமானார்.

ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ்,123 , ஜியார்ஜியாவின் இன்குஷியா என்ற இடத்தில் கடந்த 1896-ம் ஆண்டு மார்ச்சில் பிறந்ததாக நகர நிர்வாக அலுவலகத்தில் உள்ள சான்றிதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இவர் காலமானார். இவருக்கு மனைவி எட்டு பிள்ளைகள், கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 1917 முதல் 1922 வரை ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுள்ளார். தினமும் 11 மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும், தினசரி பச்சை காய்கறிகள், சுத்தமான பசும்பால் ஆகியவற்றை உணவாக அருந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

-dinamalar.com