வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது.
எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்நிறுவனத்தின் சாதனங்கள், சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கவலை தெரிவித்திருந்தன. ஆனால், அதனை ஹுவாவே மறுத்துள்ளது. -BBC_Tamil