பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி!

பாகிஸ்தானில் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் சீக்கிய வியாபாரி ஒருவர் தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ஜாம்ருத் பகுதியில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இந்திய வம்சாவளி சீக்கியர் நரஞ்ச் சிங் திறந்து நடத்தி வருகிறார்.

இவர் முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை சீக்கிய மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை பேணவும், வளர்க்கவும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில், தன் கடையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்களுக்கு தள்ளுபடி விலையில் உணவுப்பொருட்கள் வழங்க முடிவு செய்து, அதை மேற்கொண்டுள்ளார். இது அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டு குழு நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இவர் உணவு பொருட்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக உணவுப்பொருட்களை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைவான விலையில் இவர் விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in