அழுதபடி தெரேசா மே ராஜினாமா ..

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, சற்று முன் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். நான் பொறுப்பேற்க்கும் போது இந்த நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரே கனவேடு தான் செயல்பட்டு வந்தேன். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரியவேண்டும் என்று மக்கள் கொடுத்த ஆணையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்கள் ஆணையை எதிர்கிறார்கள். எனவே நான் ராஜினாமா செய்வதை விட வேறு வழி இல்லை என்று கண்ணிர் மல்க கூறிச் சென்றுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடந்த தேர்தலில் மக்கள் ஆணையிட்டுள்ள போதும். இதனை ஏற்க்க MPக்கள் மறுத்து வருவதோடு. பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார்கள். இதில் ஆழும் கட்சி உறுப்பினர்களே பெரும் எதிர்ப்பை தெரிவிப்பது, தெரேசா மே க்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. பெரும் பாலும் 2வது தேர்தலுக்கு செல்லவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.

இதுவே நடக்கும் போல உள்ளது. இன்னும் கால தாமதம் ஆனால் தேர்தல் முடிவுகள் ரத்தாகும் நிலை தோன்றலாம். ஆனால் இனி ஒரு தேர்தல் வருமேயானால், சிலவேளை பிரித்தானியா பிரியக் கூடாது என்றே மக்கள் வாக்களிக்கும் நிலை தோன்றலாம்.

-athirvu.in