கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்தது. பெண் உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்குள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாஷிங்டன் நகரில் வாடிகன் சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “கருக்கலைப்பு விவகாரம் ஒரு மதரீதியான பிரச்சினையல்ல, மாறாக மனிதாபிமான பிரச்சினை” என்று கூறினார்.
மேலும், பிரச்சினையை தீர்க்க மனித உயிரை பறிப்பது சட்டப்பூர்வமானதா? என்று கேள்வி எழுப்பிய அவர், கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கரு சரியாக வளரவில்லை என்பதால் கருக்கலைப்பு செய்வதை ஏற்கமுடியாது. அது மனிநேயமற்ற செயல். மிகவும் பலவீனமான முறையில் பிறந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளை வரவேற்போம்” என்றார்.
-athirvu.in