ஓராங் அஸ்லிகளின் மரணம்மீது பணிக்குழு அமைப்பீர்: அமனா இளைஞர்கள் கோரிக்கை

குவா மூசாங், கோலா கோ-வில் பாத்தெக் பழங்குடியைச் சேர்ந்த 14 ஓராங் அஸ்லிகளின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அமனா இளைஞர் பகுதி வலியுறுத்துகிறது.

அதன் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் அஸிம் அப்துல்லா, அவர்களின் மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஒரு பணிக்குழு அமைக்கப்படுவது அவசியம் என்றார்.

“யாரேனும் பொறுப்பைச் சரிவர செய்யவில்லை என்றோ நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றோ அதிகாரமீறலில் ஈட்பட்டதாக்வோ தெரிய வந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’, என்றாரவர்.